காவல்கிணறு, வடக்கன்குளம் பகுதி கிராமங்களில் தி.மு.க. வேட்பாளர் அப்பாவு பிரசாரம்

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கொடுமுடி ஆறு அணையில் இருந்து புதிதாக பைப்லைன் அமைத்து குடிநீர் தாராளமாக வழங்கப்படும் என்று அப்பாவு பிரசாரம் செய்தார்.
காவல்கிணறு புனித அந்தோணியார் ஆலயத்தில் தி.மு.க. வேட்பாளர் அப்பாவு வாக்கு சேகரித்த போது எடுத்த படம்.
காவல்கிணறு புனித அந்தோணியார் ஆலயத்தில் தி.மு.க. வேட்பாளர் அப்பாவு வாக்கு சேகரித்த போது எடுத்த படம்.
Published on

பணகுடி:

ராதாபுரம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அப்பாவு நேற்று காலை ஞானதிரவியம் எம்.பி.யுடன் தனது சொந்த ஊரான லெப்பை குடியிருப்பில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அங்கு உள்ள சி.எஸ்.ஐ. ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனியில் கலந்து கொண்டார். தொடர்ந்து போதகர் ஸ்டீபன் சுந்தரசிங்கிடம் வேட்பாளர் அப்பாவு ஆசி பெற்றார்.

பின்னர் திறந்த வாகனத்தில் வேட்பாளர் அப்பாவு காவல்கிணறு, வடக்கன்குளம் பஞ்சாயத்து பகுதியான பெருங்குடி, அழகியநம்பிபுரம், பெருங்காளியாபுரம், மிக்கேல்பாளையம், மரியசிங்கபுரம் உள்பட ஏராளமான கிராம பகுதிகளில் ஓட்டு சேகரித்தார். காவல்கிணறு புனித அந்தோணியார் ஆலயத்தில் ஜெபம் செய்தார். அங்கு இருந்த கிறிஸ்தவர்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

பிரசாரத்தின் போது வேட்பாளர் அப்பாவு பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கொடுமுடி ஆறு அணையில் இருந்து புதிதாக பைப்லைன் அமைத்து குடிநீர் தாராளமாக வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும்.

ராதாபுரம் தொகுதியில் படித்த இளைஞர்களுக்கு அரசு தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் காற்றாலை மின்உற்பத்தியாகும் பகுதிகளில் சிறப்புமின் வழித்தடங்கள் உருவாக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து விஜயாபதி ஊராட்சி பகுதிகள், காடுதுலா, குறிஞ்சி குளம், அரசர்குளம், தாமஸ் மண்டபம், இடிந்தகரை பகுதிகளிலும் வேட்பாளர் அப்பாவு பிரசாரம் செய்தார்.

பிரசாரத்தில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் ஜான் கென்னடி, பாஸ்கர், ஞானசேகர் முன்னாள் கவுன்சிலாகள் கோசிஜின், தம்பிராஜ், மாணிக்கம், மாடசாமி நாடார், முத்துநாடார், எல்.சி.பால், மாநில காங்கிரஸ் வர்த்தக அணி தலைவர் கணபதிராஜன், செயலாளர் வெங்கடேஷ் தனராஜ், வட்டார தலைவர் அருள்தாஸ், அலெக்ஸ் பாரத், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் முருகேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஞானசுந்தர், ராதாபுரம் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் கல்யாணகுமார், எழில் அரசு, அய்யப்பன், சாந்தி, ஜெனிபர், எஸ்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com