மம்தா கிளீன் போல்டு... பாஜக செஞ்சூரி அடித்துவிட்டது -மோடி பிரசாரம்

வங்காளத்தின் கண்ணியத்தையும் பாரம்பரியத்தையும் மம்தா பானர்ஜி அவமதிக்க வேண்டாம் என்றும், ஆணவத்தை வங்காளம் பொறுத்துக்கொள்ளாது என்றும் பிரதமர் மோடி பேசினார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலம் பர்தமானில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

நந்திகிராமில் மம்தா பானர்ஜி கிளீன் போல்டாகிவிட்டார். மம்தாவின் ஒட்டுமொத்த குழுவினரும் களத்தை விட்டு வெளியேறும்படி மக்கள் கூறிவிட்டனர். வங்காள மக்கள் அதிக பவுண்டரிகள் மற்றும் சிக்சர்கள் அடித்துவிட்டனர். இதனால் நடந்து முடிந்த 4 கட்ட தேர்தல்களிலும் பாஜக செஞ்சூரி அடித்துள்ளது. 

மம்தா அவர்களே, உங்கள் கோபத்தை யார் மீதாவது காட்ட விரும்பினால், நான் இங்கே இருக்கிறேன். நீங்கள் விரும்பும் அனைத்தையும் என் மீது துஷ்பிரயோகம் செய்யுங்கள். ஆனால் வங்காளத்தின் கண்ணியத்தையும் பாரம்பரியத்தையும் அவமதிக்க வேண்டாம். உங்கள் ஆணவத்தை வங்காளம் பொறுத்துக்கொள்ளாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com