தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு பணி நியமன ஆணை

மதுரை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு போதுமான படுக்கை வசதிகள், ஆக்சிஜன் இருப்பு ஆகியவற்றையும் கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு பணி நியமன ஆணை
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு பணி நியமன ஆணை
Published on

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.

மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த மு.க.ஸ்டாலின் கொரோனாவை முடிவுக்கு கொண்டுவர தீவிர நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com