உயிரிழந்த 17 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்- எடப்பாடி பழனிசாமி உத்தரவு

உயிரிழந்த 17 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை:

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்டம் மேடவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதன் என்பவர் மின்கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அதே போன்று விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சங்கர், அரியலூர் மாவட்டம் மணிகண்டன், மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்களான சிலம்பரசன், தேவசகாயம், பேச்சியம்மாள், அக்கினிவீரன், செந்தில், முருகன் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் அழகர்சாமி, திருச்சி மாவட்டம் கிஷோர், ராணிப்பேட்டை மாவட்டம் மனோகரன், கன்னியாகுமரி மாவட்டம் முருகராஜ், நாமக்கல் மாவட்டம் காளியண்ணன், கள்ளக்குறிச்சி மாவட்டம் அந்தோணியம்மாள் உள்பட 15 பேரும் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கோகுலன், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மோனிஷா ஆகிய 2 பேரும் பாம்பு கடித்து உயிரிழந்தனர்.

மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்த 17 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com