நிலவில் இருந்து பாறை துகள்களை பூமிக்கு எடுத்து வரும் விண்கலத்தை விண்ணில் செலுத்தியது சீனா

நிலவில் இருந்து பாறை துகள்களை பூமிக்கு எடுத்து வரும் விண்கலத்தை வெற்றிகரமாக சீனா விண்ணில் செலுத்தியது.
சீனா விண்கலம்
சீனா விண்கலம்
Published on

அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகளின் வரிசையில் சீனாவும் நிலவை ஆராய்ச்சி செய்வதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் 1976-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக சீனா நிலவிலிருந்து பாறை துகள்ளை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்ய உள்ளது.

இதற்காக சேஞ்ச் 5 என்கிற ஆளில்லா விண்கலத்தை சீனா இன்று அதிகாலை விண்ணில் செலுத்தியது. அந்த நாட்டின் ஹனைன் மாகாணத்தில் உள்ள வென்சாங் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச் 5 ராக்கெட் மூலம் சேஞ்ச் 5 விண்கலம் நிலவுக்கு புறப்பட்டது.  நிலவில் இருந்து வெற்றிகரமாக பாறை துகள்களை பூமிக்கு எடுத்து வரும் விண்கலம், டிசம்பரில் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com