போடி அருகே கட்டிட பணியின் போது தவறி விழுந்து தொழிலாளி பலி

போடி அருகே கட்டிட பணியின் போது தவறி விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

போடி:

போடி முதல்வர் காலனி 4-வது தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 50). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று போடி அருகே அமராவதிநகரில் கட்டிட பணியில் ஈடுபட்டிருந்தார். இதில், கட்டுமானத்திற்காக அமைக்கப்படும் சாரத்தில் நின்றவாறு அவர் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது நாகராஜ் அந்த சாரத்தில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை, சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபாக இறந்துபோனார். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்துபோன நாகராஜிக்கு விஜயா என்ற மனைவியும், அபிராமி என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com