பாலக்கோடு தாலுகாவில் ரூ.1.72 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் - அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்

பாலக்கோடு தாலுகாவில் ரூ.1.72 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமி பூைஜ செய்து பணியை தொடங்கி வைத்தார்.
அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தபோது எடுத்த படம்.
அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தபோது எடுத்த படம்.
Published on

தர்மபுரி:

பாலக்கோடு தாலுகா பெலமாரணஅள்ளி, பேவுஅள்ளி, அத்திமுட்லு ஆகிய இடங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ரூ.1.72 கோடி மதிப்பில் தார்சாலை மற்றும் சமுதாய கூடம் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் கார்த்திகா தலைமை தாங்கினார். கோவிந்தசாமி எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழக உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இதில் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் நாகராஜன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கநாதன், ஒன்றியக்குழு தலைவர் பாஞ்சாலை கோபால், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் சிவப்பிரகாசம், செந்தில்குமார், மாவட்ட கவுன்சிலர் கவிதா சரவணன், தாசில்தார் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தண்டபானி, கவுரி, கூட்டுறவு சங்கத்தலைவர் சரவணன், அரசு வக்கீல் செந்தில், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோபால், உதவி பொறியாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் அமைச்சர் பேசியதாவது:-

பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 18.73 கி.மீட்டர் தொலைவிற்கு ரூ.5.17 கோடி மதிப்பில் 13 தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது பெலமாரணஅள்ளி ஊராட்சியில் பூமரத்துப்பள்ளம் முதல் பி.சாத்தி ஏரி வரை ரூ.61.54 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைத்தல் பணி நடக்கிறது. இதேபோன்று பேவுஅள்ளி ஊராட்சியில் சீரியம்பட்டி முதல் பொன்னுசாமி கொட்டாய் வரை ரூ.35.88 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி நடக்கிறது.

அத்திமுட்லு கிராமத்தில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி திட்டத்தின் கீழ் ரூ.75 லட்சம் மதிப்பில் சமுதாய கூடம், உணவு அருந்தும் கூடம் கட்டும் பணிகள் ரூ.1.72 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகள் விரைவில் நிறைவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com