

சென்னை:
தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாநகர் முன்னாள் கமிஷனர் எஸ்.ஜார்ஜ், தீயணைப்பு துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதல் டி.ஜி.பி. தீயணைப்பு துறை இயக்குனர் ஆர்.சி.குடவாலா, பயிற்சி டி.ஜி.பி.யாக இடமாற்றம் செய்யப்பட்டார். பயிற்சி டி.ஜி.பி. மகேந்திரன், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கண்காணிப்பு பணி டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
எம்.சி.சாரங்கன் ஐ.ஜி, சென்னை அமலாக்கப்பிரிவு ஐ.ஜி., ஆக இடமாற்றம் செய்யப்பட்டார். எம்.கே.செந்தாமரைக்கண்ணன் ஐ.ஜி. தொழில்நுட்ப பிரிவு ஐ.ஜி.யாக இடமாற்றம். சென்னை நுண்ணரிவுப்பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனர் பி.தாமரைக்கண்ணன், சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி.யாக சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
டி.ஐ.ஜி, ஜோஷி நிர்மல்குமார், சென்னை உளவுபிரிவு சி.ஐ.டி., டி.ஐ.ஜி.யாக இடமாற்றம் செய்யப்பட்டார். டி.ஐ.ஜி, பிரேம் ஆனந்த் சின்கா, வடசென்னை போக்குவரத்து இணை கமிஷனராக இடமாற்றம். துணை கமிஷனர் ஜெயகுமார், விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
துணை கமிஷனர் செல்வகுமார், சென்னை பூக்கடை துணை கமிஷனராக மாற்றம். போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி சென்னை போலீஸ் நிர்வாக உதவி ஐ.ஜி. ஆக நியமனம். திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்கிரமன், சென்னை கியூ பிராஞ்சு சூப்பிரண்டாக நியமனம். மதுரை நகர சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனர் அருண்சக்திகுமார், திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
சென்னை சட்டம்-ஒழுங்கு உதவி ஐ.ஜி. திருநாவுக்கரசு, சென்னை நுண்ணரிவுப்பிரிவு -1 துணை கமிஷனராகவும், ஈரோடு சிறப்பு அதிரடிப்படை போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி, திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும் நியமிக்கப்பட்டனர். சென்னை சிறப்பு பிரிவு எஸ்.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு அரஅருளரசு, நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமனம்.
சென்னை சி.பி.சி.ஐ.டி-3 போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா, ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமனம். மதுரை அமலாக்கப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய், நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும், ஈரோடு சிறப்பு அதிரடிப்படை உதவி போலீஸ் சூப்பிரண்டு அருண்பாலகோபாலன், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பிரிவு உதவி போலீஸ் சூப்பிரண்டாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.