தமிழகத்தில் 15 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக 15 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை நிலவர வரைபடம்
வானிலை நிலவர வரைபடம்
Published on

சென்னை:

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-

தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு வேலூர், திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம், நீலகிரி, கோவை, தேனி, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் முற்பகல் வேளையில் வானம் ஒரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மாலையிலோ அல்லது இரவு வேளையிலோ லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சென்னை டி.ஜி.பி. அலுவலகம், சேலத்தில் 5 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com