பா.ஜனதா கொள்கைகள் நாட்டு நலனுக்கு எதிரானது - டி.ராஜா

பா.ஜனதா கொள்கைகள் நாட்டு நலனுக்கு எதிரானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா கூறியுள்ளார்.
டி ராஜா
டி ராஜா
Published on

ஆலந்தூர்:

இந்திய கம்யூனிஸ்டு தேசிய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட டி.ராஜா இன்று சென்னை திரும்பினார். அப்போது அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாட்டில் தற்போது பல சோதனைகள், சவால்கள் நிரம்பிய அரசியல் சூழ்நிலையில் என்னை கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எனக்கு வாழ்த்து தெரிவித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

நெருக்கடியான கால கட்டத்தில் பா.ஜனதா அரசு பின்பற்றும் கொள்கைகள் நாட்டின் நலனுக்கு எதிராக உள்ளது. மதவெறி அரசியலை முறியடித்து தமிழக மக்கள் வாக்களித்தார்கள். மதவெறி அரசியல் மூலம் மக்களை பிளவுப்படுத்தியும், பொருளாதார நிலையை சீர்குலைய செய்யும் பா.ஜனதா அரசுக்கு எதிராக போராட வேண்டி உள்ளது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கும், கட்சி நடத்தும் போராட்டங்களுக்கும் தமிழக மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். ஏர்-இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்யும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அதை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்டு போராடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com