

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி கர்ணன், தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்தார். இதனால், ஆத்திரமடைந்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கர்ணனுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
நீதிபதி கர்ணனை கைது செய்ய கொல்கத்தா போலீசார் சென்னையில் முகாமிட்டிருந்த போதிலும், அவர் தலைமறைவாக உள்ளதால் கைது செய்ய முடியவில்லை. இந்நிலையில், தன் மீதான சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி நீதிபதி கர்ணன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.