சேலத்தில் தண்ணீர் தொட்டியில் விழுந்து சூப்பர்வைசர் பலி

சேலத்தில் தண்ணீர் தொட்டியில் விழுந்து சூப்பர்வைசர் பலியானார். தண்ணீர் தொட்டியை அவர் ஆய்வு செய்த போது தவறி விழுந்து இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சேலத்தில் தண்ணீர் தொட்டியில் விழுந்து சூப்பர்வைசர் பலி
Published on

சேலம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 39).

இவர் சேலம் களரம்பட்டியில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான ஆயில் மில்லில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார்.

ஜெயக்குமார் நேற்றிரவு வழக்கம் போல பணியில் இருந்தார். இன்று காலை அவரை காணாததால் சக ஊழியர்கள் தேடினர். அப்போது அங்குள்ள தண்ணீர் தொட்டி அருகே அவரது செருப்பு கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் தொட்டிக்குள் பார்த்த போது அங்கு தண்ணீரில் மூழ்கி ஜெயக்குமார் இறந்து கிடந்ததது தெரிய வந்தது.

இதை பார்த்து மேலும் அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் கிச்சிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் ஜெயக்குமார் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுது புரண்டனர்.

இது தொடர்பாக ஆயில் மில்லில் உள்ள கேமராக்களை போலீசார் ஆய்வு செய்த போது தொட்டியில் கிடக்கும் தண்ணீரை ஜெயக்குமார் ஆய்வு செய்த போது தவறி விழுந்து இறந்ததை உறுதி செய்ததாக தெரிவித்தனர். ஜெயக்குமாருக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. இவருக்கு குழந்தைகள் இல்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com