மைனர் பெண்ணை கடத்தி பணம் கேட்டு மிரட்டல்- உளுந்தூர்பேட்டை வாலிபர் கைது

மகளை காணாமல் பல இடங்களில் தேடிய அவரது பெற்றோர் பெரியகுளம் போலீசில் புகார் அளித்தனர்.சிறுமி உளுந்தூர்பேட்டையில் இருந்ததை அறிந்த போலீசார் அங்கு சென்று அவரை மீட்டனர்.
சதீஸ்குமார்
சதீஸ்குமார்
Published on

பெரியகுளம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் சதீஸ்குமார்(23). இவருக்கும் தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் செல்போனிலேயே பேசி வந்த நிலையில் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி சதீஸ்குமார் கடந்த மே மாதம் 3-ந்தேதி தனது ஊருக்கு அழைத்துச்சென்றுவிட்டார்.

மகளை காணாமல் பல இடங்களில் தேடிய அவரது பெற்றோர் பெரியகுளம் போலீசில் புகார் அளித்தனர். உளுந்தூர்பேட்டையில் இருந்ததை அறிந்த போலீசார் அங்கு சென்று சிறுமியை மீட்டனர். இந்நிலையில் சதீஸ்குமார் சிறுமியின் உறவினர் ஒருவருக்கு செல்போன் மூலம் பேசி அவரை தன்னுடன் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் ரூ.70 ஆயிரம் பணம் தர வேண்டும் என கூறியுள்ளார்.

அவ்வாறு தர மறுத்தால் தாங்கள் 2 பேரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட போவதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்து பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் அன்னமயில் தலைமையிலான போலீசார் உளுந்தூர்பேட்டைக்கு சென்று சதீஸ்குமாரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com