பாவூர்சத்திரம் அருகே கல்லூரி தோழி இறந்த துக்கத்தில் இளம்பெண் தற்கொலை

திலகா தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். சகதோழியான பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த மற்றொரு மாணவியுடன் திலகா மிகவும் நட்பாக இருந்துள்ளார்.
பாவூர்சத்திரம் அருகே கல்லூரி தோழி இறந்த துக்கத்தில் இளம்பெண் தற்கொலை
Published on

தென்காசி:

பாவூர்சத்திரம் அருகே உள்ள பெத்த நாடார்பட்டி கிராமம் முருகன் குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பொன் காமராஜ். இவரது மகள் திலகா (வயது 20). நேற்று மாலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது துப்பட்டாவால் தூக்கு போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் அங்கு விரைந்து சென்று திலகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் திலகா தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இவர் கல்லூரி படிக்கும்போது, இவருடன் படித்த சகதோழியான பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த மற்றொரு மாணவியுடன் மிகவும் நட்பாக இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார். அவர் இறந்ததில் இருந்து திலகா மனம் உடைந்து காணப்பட்டதாகவும், கடந்த 10 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com