நள்ளிரவில் பேக்கரியை வாளால் வெட்டி சேதப்படுத்திய வாலிபர்

சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்ததில், வாலிபர் ஒருவர் வாளை கொண்டு கடையில் உள்ள பொருட்களை உடைத்து நொறுக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. வாளால் கடையை சேதப்படுத்திய வாலிபர் டவுன் அடைக்கலமாதா தெருவை சேர்ந்த மாதவன் என்பது தெரியவந்தது.
பேக்கரியில் வைத்திருந்த பாட்டில்களை வாலிபர் வாளால் வெட்டும் காட்சி.
பேக்கரியில் வைத்திருந்த பாட்டில்களை வாலிபர் வாளால் வெட்டும் காட்சி.
Published on

நெல்லை:

நெல்லை டவுன் சாலியர் தெரு பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ்(வயது 60). இவர் அதே தெருவில் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பேக்கரி நடத்தி வருகிறார்.

நேற்று நள்ளிரவு கடையை அடைக்கும் நேரத்தில் சாலியர் தெரு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் சுமார் 3 அடி நீளம் கொண்ட வாளுடன் தங்கராஜ் கடைக்கு வந்தார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் கடையின் முகப்பில் இனிப்பு, காரங்கள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பாட்டில்களை சரமாரியாக வாளால் வெட்டினார். இதில் கண்ணாடி பாட்டில்கள் நொறுங்கின. மேலும் கடையை அடித்து நொறுக்கி சூறையாடிவிட்டு அங்கு பணியில் இருந்த ஊழியர்களையும் வாளால் மிரட்டி விட்டு சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து அங்கிருந்த ஊழியர்கள் கடையில் இருந்து வெளிய வந்து டவுன் போலீஸ் நிலையத்துக்கு சென்று தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்ததில், வாலிபர் ஒருவர் வாளை கொண்டு கடையில் உள்ள பொருட்களை உடைத்து நொறுக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதனை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், வாளால் கடையை சேதப்படுத்திய வாலிபர் டவுன் அடைக்கலமாதா தெருவை சேர்ந்த மாதவன்(வயது 25) என்பது தெரியவந்தது.

இவர் மீது கஞ்சா உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. மாதவன் கஞ்சா விற்பதாக தங்கராஜ் தரப்பினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாகவும், அதனை அறிந்த மாதவன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி மாதவனை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com