வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே வாலிபர் கழுத்து இறுக்கி கொலை

மர்ம நபர்கள் ஒயரால் சஞ்சயை கழுத்தை இறுக்கி கொலை செய்து வீசி விட்டு சென்றுள்ளனர்.போலீசார் லாரி செட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே வாலிபர் கழுத்து இறுக்கி கொலை
Published on

வேலூர்:

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள முத்துமண்டபம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் (வயது 21), எலக்ட்ரீசியன். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

தாய் தந்தையை இழந்த சஞ்சய் தனது அக்கா வீட்டில் தங்கி வேலை செய்தார். அக்காவுடன் கருத்து வேறுபாடு காரணமாக தற்போது லாரி செட்டிலேயே தங்கி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சஞ்சய் இன்று காலை சேண்பாக்கத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் வரும் சர்வீஸ் சாலையில் உள்ள அம்மாகண் செட் அருகே கொலை செய்யபட்டு பிணமாக கிடந்தார். அவரது கழுத்தில் ஒயர்கள் சுற்றப்பட்டு இருந்தது.

மர்ம நபர்கள் ஒயரால் சஞ்சயை கழுத்தை இறுக்கி கொலை செய்து வீசி விட்டு சென்றுள்ளனர். இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சஞ்சய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் லாரி செட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

சஞ்சய்க்கு யாரேனும் எதிரிகள் உள்ளனரா? முன்விரோதம் உள்ளவர்களின் விவரம் மற்றும் செல்போனின் அழைப்புகள் உள்ளிட்டவைகளை கொண்டு தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com