ஊட்டி சுற்றுலா தலங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கோடை சீசன் தொடங்கிய நிலையில், கடந்த ஒரு மாதமாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது.தாவரவியல் பூங்காவில் பூத்தும் குலுங்கும் மலர்களை கண்டு ரசித்து, அதன் முன்பு செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.
ஊட்டி சுற்றுலா தலங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்
Published on

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, வார விடுமுறை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

தற்போது சமவெளி பகுதிகளில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதன் காரணமாக வெயிலில் இருந்து தப்பிக்கவும், இதமான கால நிலையை அனுபவிக்கவும் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

கோடை சீசன் தொடங்கிய நிலையில், கடந்த ஒரு மாதமாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது.

சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி, பைக்காரா படகு இல்லம், தொட்டபெட்டா மலை சிகரம் உள்ளிட்ட பகுதிகளில் குடும்பத்துடன் சுற்றி பார்த்தனர்.

தாவரவியல் பூங்காவில் பூத்தும் குலுங்கும் மலர்களை கண்டு ரசித்து, அதன் முன்பு செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.

சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக நகரின் முக்கிய சாலையான கமர்சியல் சாலை, பூங்கா செல்லும் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com