search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருப்பத்தூர் அருகே மர்ம கார்: ஏ.டி.எம். கொள்ளை கும்பல் பயன்படுத்தியதா? என விசாரணை
    X

    திருப்பத்தூர் அருகே மர்ம கார்: ஏ.டி.எம். கொள்ளை கும்பல் பயன்படுத்தியதா? என விசாரணை

    • போலீசார் அங்கு விரைந்து சென்று காரை சோதனை நடத்தினர். கார் கேரள பதிவு எண்ணை கொண்டுள்ளது.
    • கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, சீட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.காரில் மஞ்சள் பொடி தூவி உள்ளனர்.

    திருப்பத்தூர்:

    திருவண்ணாமலையில் 4 ஏ.டி.எம்.களை உடைத்து வடமாநில கும்பல் ரூ.75 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை திருப்பத்தூரில் இருந்து சேலம் செல்லும் ரோட்டில் கொரட்டியில் மர்ம கார் ஒன்று சந்தேகம் அளிக்கும் வகையில் நீண்ட நேரம் நின்றது.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்று காரை சோதனை நடத்தினர். கார் கேரள பதிவு எண்ணை கொண்டுள்ளது.

    கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, சீட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.காரில் மஞ்சள் பொடி தூவி உள்ளனர்.

    ஏ.டி.எம். கொள்ளையர்களை போலீசார் தேடிவரும் நிலையில் மர்ம கார் சிக்கியுள்ளதால் ஏ.டி.எம். கொள்ளையில் தொடர்புடைய கும்பல் வந்த காரா? என்ற கோணத்தில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக கேரள வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×