வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறப்பு

புயலில் விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. கூண்டில் அடைக்கப்பட்டு இருந்த சிங்கம், புலி உள்ளிட்ட விலங்குகள் வெளியே விடப்பட்டுள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறப்பு
Published on

வண்டலூர்:

மிச்சாங் புயல் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. புயல் காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்கா கடந்த திங்கட்கிழமை முதல் 4 நாட்கள் மூடப்பட்டது.

இந்நிலையில், 4 நாட்களாக மூடப்பட்ட வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறக்கப்பட்டுள்ளது. புயலில் விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. சுற்றுச்சுவர் இடிந்த நிலையில், மறைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தேங்கிய மழைநீர் அகற்றப்பட்ட நிலையில் கூண்டில் அடைக்கப்பட்டு இருந்த சிங்கம், புலி உள்ளிட்ட விலங்குகள் வெளியே விடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com