தூத்துக்குடியில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து- 15 பேர் படுகாயம்

சுற்றுலா வேன் திடீரென முன்பக்க டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்து உருண்டது.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து- 15 பேர் படுகாயம்
Published on

தூத்துக்குடி:

வேலூர் மாவட்டம் அடுக்கம்பாளையம் பகுதியில் இருந்து வெற்றி (வயது37), ரேவதி, ஜோதி உள்ளிட்ட 15 பேர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்வதற்காக சுற்றுலா வேன் மூலம் புறப்பட்டு சென்றனர்.

தூத்துக்குடி சிப்காட் பகுதியில் மதுரை புறவழிச்சாலையில் இன்று காலை வந்த போது சுற்றுலா வேன் திடீரென முன்பக்க டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்து உருண்டது.

இதில் வாகனத்தில் வந்த ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், தனி பிரிவு காவலர் பொன்பாண்டியன் மற்றும் போலீசார் சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் புன்னவனக்கட்டி உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com