தூத்துக்குடி கடற்கரை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 10 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்

கடற்கரையோரமாக சந்தேகத்திற்க்கு இடமாக வந்த மினிலாரியை மறித்து சோதனை நடத்தினர்.போலீசார் மினி லாரியை சோதனை செய்தபோது அதில் 32 மூடைகளில் ஆயிரம் கிலோ பீடி இல்லைகள் இருப்பது தெரியவந்தது.
தூத்துக்குடி கடற்கரை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 10 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி கடலோர பகுதி வழியாக பீடி இலைகள், மஞ்சள் மற்றும் டீசல் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி தாளமுத்துநகர் கடற்கரையோர பகுதி வழியாக இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்பட இருப்பதாக கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையிலான போலீசார் தூத்துக்குடி கடலோர பகுதிகளில் இன்று அதிகாலை தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது தூத்துக்குடி தாளமுத்துநகர்-ராஜபாளையம் கடற்கரையோரமாக சந்தேகத்திற்க்கு இடமாக வந்த மினிலாரியை மறித்து சோதனை நடத்தினர்.

அப்போது திடீரென போலீசார் வருவதை கண்டதும் மினிலாரியில் இருந்தவர்கள் அதனை நிறுத்தி விட்டு கீழ இறங்கி தப்பி ஓடி விட்டனர். போலீசார் மினி லாரியை சோதனை செய்தபோது அதில் 32 மூடைகளில் ஆயிரம் கிலோ பீடி இல்லைகள் இருப்பது தெரியவந்தது.

இதன் மதிப்பு ரூ. 10 லட்சம் என கூறப்படுகிறது. அதனை பறிமுதல் செய்த போலீசார் பீடி இலைகளை கடத்த முயன்றவர்கள் யார்? மினி லாரியில் இருந்து தப்பி ஓடியவர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com