search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவள்ளூர் பஸ் நிலையத்தில் மஞ்சப்பை பெற சிறப்பு எந்திரம்
    X

    திருவள்ளூர் பஸ் நிலையத்தில் மஞ்சப்பை பெற சிறப்பு எந்திரம்

    • எந்திரத்தை பொதுமக்கள் பயன்படுத்தி மஞ்சப்பையை பெற்றுக் கொள்ளலாம் என்றார்.
    • பொது மக்களுக்கு மஞ்சப் பை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அவர் வழங்கினார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை உபயோகம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தில் முதன் முறையாக மஞ்சப்பை வழங்கும் எந்திரம் கலெக்டர் அலுவலகத்திலும், திருவள்ளூரில் உள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்திலும் வைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

    மேலும் திருவள்ளூர் பஸ் நிலையம், ஆவடி பஸ் நிலையம், பொன்னேரி பஸ் நிலையம், திருத்தணி முருகன் கோயில் ஆகிய இடங்களிலும் மஞ்சப்பை விற்பனை எந்திரத்தை பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் திருவள்ளூர் பஸ் நிலையத்தில் மஞ்சப்பை விற்பனை எந்திரத்தை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார். இதில் ரூ.10 செலுத்தி மஞ்சப்பையை பெற்றுக்கொள்ளலாம்.

    இதில் புதிய ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 மற்றும் 10 ரூபாய் நோட்டுகளை செலுத்த வசதி செய்யப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் கூறும்போது, 'ஒரு முறை பயன்படுத்தி தூக்கிய எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக எளிதில் மக்கும் தன்மையுடைய இயற்கையில் கிடைக்கும் மாற்றுப் பொருட்களான துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும்.

    இந்த எந்திரத்தை பொதுமக்கள் பயன்படுத்தி மஞ்சப்பையை பெற்றுக் கொள்ளலாம் என்றார். இதனைத்தொடர்ந்து பொது மக்களுக்கு மஞ்சப் பை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அவர் வழங்கினார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் க.ராஜலட்சுமி, சுகாதார அலுவலர் கே.ஆர்.கோவிந்தரா ஜூலு, சுகாதார ஆய்வாளர் வெயில்முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×