search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாகையில் இன்று காலை இந்திய கடற்படை போலீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
    X

    நாகையில் இன்று காலை இந்திய கடற்படை போலீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து துப்பாக்கியை கைப்பற்றி ராஜேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • ராஜேஷ் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் துறைமுகத்தின் உள்ளே இந்திய கடற்படை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் (வயது 27) போலீசாக பணியாற்றி வந்தார். இவர் நேற்றிரவு வழக்கம் போல் கடற்படை அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.

    இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் ராஜேஷ் திடீரென தனக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கியால் தன்னை தானே கழுத்தில் சுடதொடங்கினார் சத்தம் கேட்டு கடற்படை அலுவலகத்தில் இருந்த சக போலீசார், ஊழியர்கள் ஓடி சென்று பார்த்தனர். அங்கு துப்பாக்கியால் சுட்டபடி ராஜேஷ் தற்கொலை செய்து பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்து நாகை நகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து துப்பாக்கியை கைப்பற்றி ராஜேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் ராஜேஷ் பணிச்சுமை காரணமாக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்ப பிரச்சினை காரணமா?என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் தற்கொலைக்கு பயன் படுத்திய துப்பாக்கி 30 குண்டுகள் கொள்ளளவு கொண்ட இன்சாஸ் வகையை சேர்ந்தது. அதனை வைத்து கழுத்தில் சுட்டத்தில் ஒரு குண்டு துளைத்து ராஜேஷ் பலியானது தெரிய வந்தது. தொடர்ந்து ராஜேஷ் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×