திருமணத்துக்கு சில மணி நேரத்துக்கு முன்பு மணமகனை அடித்துக்கொன்ற தந்தை

முதற்கட்ட விசாரணையில், கவுரவ் சிங்கால் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை.தந்தை-மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
திருமணத்துக்கு சில மணி நேரத்துக்கு முன்பு மணமகனை அடித்துக்கொன்ற தந்தை
Published on

தெற்கு டெல்லியில் உள்ள டெவ்லி எக்ஸ்டென்சன் பகுதியை சேர்ந்தவர் கவுரவ் சிங்கால் (வயது29). உடற்பயிற்சி கூடம் நடத்தி வந்தார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அவரது வீட்டில் இருந்து திருமண ஊர்வலம் தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு கவுரவ் சிங்காலுக்கும் அவரது தந்தைக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த தந்தை, கூர்மையான ஆயுதத்தால் கவுரவ் சிங்காலுவை தாக்கி கொலை செய்தார். இதையடுத்து அவரது தந்தையை போலீசார் கைது செய்தார்.

முதற்கட்ட விசாரணையில், கவுரவ் சிங்கால் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. அவர் வேறொரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதை குடும்பத்தினர் ஏற்கவில்லை. இது தொடர்பாக தந்தை-மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இப்பிரச்சினையில் கவுரவ் சிங்கால் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com