என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜனதா துணைத்தலைவர் கட்சியில் இருந்து நீக்கம்- அண்ணாமலை அதிரடி
    X

    கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜனதா துணைத்தலைவர் கட்சியில் இருந்து நீக்கம்- அண்ணாமலை அதிரடி

    • கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாலும் அவர் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.
    • கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம்.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜனதா துணைத்தலைவராக இருப்பவர் ஆரூர் டி.ரவி.

    இவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாலும் அவர் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

    இதுதொடர்பாக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருவதாலும் ஆரூர் டி.ரவி கட்சி பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுகிறார். அவருடன் கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

    Next Story
    ×