search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திண்டுக்கல் அருகே மறவபட்டி ஜல்லிக்கட்டில் வீரர்களை பந்தாடிய காளைகள்
    X

    மறவபட்டி ஜல்லிக்கட்டில் தன்னை அடக்க வந்த வீரரை காளை தூக்கி பந்தாடிய காட்சி.

    திண்டுக்கல் அருகே மறவபட்டி ஜல்லிக்கட்டில் வீரர்களை பந்தாடிய காளைகள்

    • ஜல்லிக்கட்டு போட்டியை காண திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கூடியதால் மறவபட்டியில் திருவிழா கோலம் பூண்டது.
    • பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. கோகுல கிருஷ்ணன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் செய்திருந்தனர்.

    தாடிக்கொம்பு:

    திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உள்ள மறவபட்டியில் 200 ஆண்டுகள் பழமையான பெரிய அந்தோணியார் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

    இதற்காக தேனி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500 காளைகள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. காளைகளை அடக்க 200 மாடுபிடி வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்திருந்தனர். அவர்களில் உடல் தகுதி சோதனை நடத்தப்பட்டு 120 மாடுபிடி வீரர்கள் களத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

    போட்டியை விலங்குகள் நல வாரிய தலைவர் டாக்டர் மிட்டல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டதற்கு பிறகு போட்டி தொடங்கியது. வாடிவாசல் வழியாக வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்க முயன்றனர். ஆனால் பல காளைகள் வீரர்கள் பிடியில் சிக்காமல் நின்று விளையாடியது. மேலும் சில காளைகள் தன்னை அடக்க வந்த வீரரை தூக்கி பந்தாடியது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயம், பீரோ, கட்டில், சைக்கிள், செல்போன் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

    போட்டியை காண திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கூடியதால் மறவபட்டியில் திருவிழா கோலம் பூண்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. கோகுல கிருஷ்ணன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் செய்திருந்தனர்.

    காளைகள் தாக்கியதில் காயமடைந்த வீரர்களுக்கு மைதானத்தின் அருகிலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. படுகாயமடைந்தவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    Next Story
    ×