1 வருடமாக பணிக்கு வராத ஜெயில் வார்டன் டிஸ்மிஸ்- அதிகாரிகள் நடவடிக்கை

சேலம் மாவட்ட மத்திய சிறையில் சேலத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவர் வார்டனாக பணியாற்றி வந்தார்.ஜெயில் அதிகாரிகள், அவருக்கு நினைவூட்டல் கடிதம் மூலமாகவும், வீட்டிற்கு நேரில் சென்றும் பலமுறை அழைப்பு விடுத்தனர்.
1 வருடமாக பணிக்கு வராத ஜெயில் வார்டன் டிஸ்மிஸ்- அதிகாரிகள் நடவடிக்கை
Published on

சேலம்:

சேலம் மாவட்ட மத்திய சிறையில் சேலத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவர் வார்டனாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த வருடம் மார்ச் மாதம் பணி முடிந்து வீட்டிற்கு சென்றார். பின்னர் அன்று முதல் இன்று வரை பணிக்கு வரவில்லை.

இது குறித்து ஜெயில் அதிகாரிகள், அவருக்கு நினைவூட்டல் கடிதம் மூலமாகவும், வீட்டிற்கு நேரில் சென்றும் பலமுறை அழைப்பு விடுத்தனர். ஆனால் அவர் தொடர்ந்து பணிக்கு வரவில்லை. இது பற்றி ஜெயில் அதிகாரிகள், மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து உயர் அதிகாரிகள் பரிந்துரையின் பேரில் சிறைதுறை நிர்வாகம் வார்டன் சீனிவாசனை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் மற்ற வார்டன்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com