குடியாத்தம் அருகே ரெயில் முன் பாய்ந்து கணவன், மனைவி தற்கொலை

கணவன், மனைவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம் அருகே ரெயில் முன் பாய்ந்து கணவன், மனைவி தற்கொலை
Published on

ஜோலார்பேட்டை:

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த அலங்காநல்லூர் மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 50) விவசாயி.

இவரது மனைவி மல்லிகா (47) ஒரு மகள், மகன் உள்ளனர். அவர்கள் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர்.

கணவன்-மனைவி இருவரும் மட்டும் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் தம்பதிக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர்.

மோகன், மல்லிகா இருவரும் நேற்று இரவு 8 மணியவில் லத்தேரி-காட்பாடி செல்லும் ரெயில் தண்டவாளத்திற்கு வந்தனர்.

அப்போது நாகர்கோவிலில் இருந்து, மும்பை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்தனர். இதில் அவர்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

கணவன், மனைவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com