search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வெயிலின் தாக்கம் அதிகரித்தபோதும் கொடைக்கானலில் குறையாத சுற்றுலா பயணிகள் கூட்டம்
    X

    வெயிலின் தாக்கம் அதிகரித்தபோதும் கொடைக்கானலில் குறையாத சுற்றுலா பயணிகள் கூட்டம்

    • கோடை விடுமுறையால் பலர் குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருகின்றனர்.
    • சுற்றுலா பயணிகள் வந்ததால் நகரில் போக்குவரத்து நெரிசல் தொடர் கதையாகி வருகிறது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கோடை விடுமுறையில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் கோடை விழா மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

    இதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பே பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜாபூங்கா ஆகிய இடங்களில் பல வகைகளில் மலர் செடிகள் நடப்பட்டன. தற்போது பூங்காக்களில் ஏராளமான வண்ண மலர்கள் பூத்து குலுங்குவது சுற்றுலா பயணிகளின் கண்களை கவரும் வண்ணம் உள்ளது.

    கோடை விடுமுறையால் பலர் குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருகின்றனர். தரைப்பகுதியில் வெயில் வாட்டி வதைத்து வருவதால் மலைஸ்தலங்களுக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிக அளவு சுற்றுலா பயணிகள் வந்ததால் நகரில் போக்குவரத்து நெரிசல் தொடர் கதையாகி வருகிறது.

    மேலும் மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருந்தபோதும் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். வருகின்ற 26ந் தேதி மலர் கண்காட்சி தொடங்குகிறது. அப்போது சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் கூடுதல் போலீசார் பணி அமர்த்தப்பட்டு போக்குவரத்தை சீரமைக்க வேண்டும்.

    மேலும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகையால் வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×