search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஓ.பி.எஸ். அணி வேட்பாளர் வாபஸ் எப்போது?- மாவட்ட செயலாளர் முருகானந்தம் பேட்டி
    X

    ஓ.பி.எஸ். அணி வேட்பாளர் வாபஸ் எப்போது?- மாவட்ட செயலாளர் முருகானந்தம் பேட்டி

    • இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் வேட்பாளருக்கு ஆதரவு என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
    • சுப்ரீம் கோர்ட்டு உத்தரவில் பொதுக்குழு உறுப்பினர்கள் தான் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓ.பி.எஸ். அணி சார்பில் செந்தில்முருகன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வேட்பு மனுவும் தாக்கல் செய்தார். மனுவில் கட்சி என்ற இடத்தில் அ.தி.மு.க. என்றும் சின்னம் என்ற இடத்தில் நிரப்பாமலும் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் வேட்பாளருக்கு ஆதரவு என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவில் பொதுக்குழு உறுப்பினர்கள் தான் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது. எனவே ஓ.பி.எஸ். அணி வேட்பாளர் வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    இது குறித்து ஓ.பி.எஸ். அணியின் மாவட்ட செயலாளர் முருகானந்தத்திடம் கேட்ட போது, வேட்பாளர் வாபஸ் பெறுவது குறித்து கட்சி தலைமையிடம் இருந்து இதுவரை எனக்கு எந்த தகவலும் வரவில்லை என்றார். எனவே வருகிற 10-ந் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும். எனவே அன்றைய தினமே அவர் வாபஸ்பெறலாம் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×