இரணியல் அருகே மனைவி இறந்த சோகத்தில் சித்த வைத்தியர் தற்கொலை

மனைவியின் இறுதி சடங்கு நடந்தபோது, உறவினர்களிடம் 2 குழிகள் தயார் பண்ணுங்கள் என கூறியுள்ளார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இரணியல் அருகே மனைவி இறந்த சோகத்தில் சித்த வைத்தியர் தற்கொலை
Published on

இரணியல்:

இரணியல் அருகே உள்ள வில்லுக்குறியை அடுத்த குதிரை பந்திவிளையைச் சேர்ந்தவர் செல்வஜார்ஜ் (வயது 77), சித்த வைத்தியர்.

இவர் ஊர் ஊராக சைக்கிளில் சென்று சித்த மருத்துவம் செய்து வந்தார். இவரது மனைவி மரிய தங்கம் (72). இவர் கடந்த மாதம் 23 -ந் தேதி உடல் நலக்குறைவால் இறந்தார்.

இதனால் மன வேதனை அடைந்த செல்வஜார்ஜ், மனைவியின் இறுதி சடங்கு நடந்தபோது, உறவினர்களிடம் 2 குழிகள் தயார் பண்ணுங்கள் என கூறியுள்ளார். மனவருத்தம் காரணமாக அவர் இவ்வாறு பேசுகிறார் என உறவினர்கள் நினைத்த போது தான், செல்வஜார்ஜ் விஷம்அருந்தி இருப்பது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து அவரை தக்கலை அரசு மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை செல்வஜார்ஜ் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அவரது மகன் அஜிஸ் (49) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com