ஈரோடு இடைத்தேர்தல்- அதிமுக நிர்வாகிகளுடன் ஈ.பி.எஸ்- ஓ.பி.எஸ் தனித்தனியே ஆலோசனை

சேலம் மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு இடைத்தேர்தல்- அதிமுக நிர்வாகிகளுடன் ஈ.பி.எஸ்- ஓ.பி.எஸ் தனித்தனியே ஆலோசனை
Published on

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. மனு தாக்கல் தொடங்கிய நிலையில், கட்சிகள் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து வேட்டு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

அதிமுகவில், எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஓ. பி.எஸ். அணி சார்பில் செந்தில்முருகன் என்பவர் அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், சேலம் மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் சேலம் மாவட்ட பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். அங்கு, பொதுக்குழு உறுப்பினர் அடையாள அட்டை, ஆதார், கட்சியின் அடிப்படை உறுப்பினர் அட்டை, புகைப்படம் நகல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் வைத்திலிங்கம், மனோஷ் பாண்டியன், ஜேசிடி.பிரபாகர் பங்கேற்றுள்ளனர். பொது வேட்பாளர் தேர்வு, தங்கள் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com