ஊத்தங்கரை அருகே கோழிப்பண்ணையில் 3 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் தீயில் கருகின

கோழிப்பண்ணைக்கு வளர்ப்புக்காக சுமார் 3000 கோழி குஞ்சுகளை இறக்கி உள்ளார்.கோழிப்பண்ணையில் பற்றி எரிந்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஊத்தங்கரை அருகே கோழிப்பண்ணையில் 3 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் தீயில் கருகின
Published on

மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை அருகே உள்ள நார்சம்பட்டி பகுதியில் ராஜசேகர் என்பவர் கோழி பண்ணை நடத்தி வந்தார்.

இதில் நேற்று இரவு கோழிப்பண்ணைக்கு வளர்ப்புக்காக சுமார் 3000 கோழி குஞ்சுகளை இறக்கி உள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை கோழி பண்ணையில் மின் ஒயர்கள் தீ பற்றி எரிய தொடங்கியது. இது குறித்து ஊத்தங்கரை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். கோழிப்பண்ணையில் பற்றி எரிந்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதில் பண்ணையில் இருந்த வைத்திருந்த 3000 கோழி குஞ்சுகள், குடோன் மற்றும் கோழி தீவனங்கள் உட்பட சுமார் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீ விபத்தால் சேதம் அடைந்தது.

இச்சம்பவம் குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com