மெரினாவில் கடல் அழகை ரசிக்க மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு நடைபாதை வசதி

சென்னை மெரினா கடற்கரை மணல் பரப்பில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் கடல் அழகை ரசிக்கும் வகையில் மரக்கட்டையால் சிறப்பு நடைபாதை வசதி சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டு உள்ளது.அடுத்த வாரத்தில் இந்த சிறப்பு நடைபாதை வசதியை திறக்க மாநகராட்சி முடிவு செய்து உள்ளது.
மெரினாவில் கடல் அழகை ரசிக்க மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு நடைபாதை வசதி
Published on

சென்னை:

சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான நிரந்தர நடைபாதை வசதி அடுத்த வாரம் திறக்கப்பட உள்ளது.

சென்னை மெரினா கடற்கரை மணல் பரப்பில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் கடல் அழகை ரசிக்கும் வகையில் மரக்கட்டையால் சிறப்பு நடைபாதை வசதி சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டு உள்ளது.

கடற்கரை மணல் பரப்பில் அமைக்கப்பட்ட இந்த நடைபாதையில் மாற்றுதிறனாளிகள், முதியோர்கள் வீல்சேருடன் சென்று கடல் அலையை ரசிக்க கடற்கரை ஒழுங்கு முறை ஆணையம் சிறப்பு அனுமதி அளித்து உள்ளது.

இந்த சிறப்பு நடைபாதை 380 மீட்டர் நீளம், 3 மீட்டர் அகலத்தில் மரத்தினால் அமைக்கப்பட்டு உள்ளது. கடற்கரை சாலை விவேகானந்தர் இல்லம் எதிரே மணல் பரப்பில் மரப்பலகையால் இந்த சிறப்பு நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது.

ரூ.1 கோடி செலவில் இந்த நடைபாதை அமைப்பு பணிகள் செய்யப்பட்டு உள்ளன.

இந்த பணிகள் அனைத்தும் தற்போது நிறைவடைந்த நிலையில் அடுத்த வாரத்தில் இந்த சிறப்பு நடைபாதை வசதியை திறக்க மாநகராட்சி முடிவு செய்து உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. இந்த நடைபாதை வழியாக செல்லும் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் கடல் அழகை ரசிப்பதற்காக 4 சிறப்பு சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com