பெரியபாளையம் அருகே ரூ.8 லட்சம் மதிப்புள்ள இரும்பு கம்பி திருட்டு- 5 பேர் கைது

மஞ்சங்காரனை கிராமத்தில் இரும்பு கம்பி தயாரிக்கும் தனியார் நிறுவனம் உள்ளது. இரும்பு கம்பி திருட்டு தொடர்பாக பெரியபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
பெரியபாளையம் அருகே ரூ.8 லட்சம் மதிப்புள்ள இரும்பு கம்பி திருட்டு- 5 பேர் கைது
Published on

பெரியபாளையம்:

பெரியபாளையம் அருகே உள்ள மஞ்சங்காரனை கிராமத்தில் இரும்பு கம்பி தயாரிக்கும் தனியார் நிறுவனம் உள்ளது. இங்கிருந்த சுமார் 30 டன் எடை கொண்ட ரூ.8 லட்சம் மதிப்பிலான இரும்பு கம்பிகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து பெரியபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சென்னை மாத்தூரைச் சேர்ந்த வாசுதேவன், செங்குன்றம் ஆட்டதாங்கலை சேர்ந்த ரவி, அவரது சகோதரர் பழனி, செங்குன்றத்தைச் சேர்ந்த நாசர், தென்காசியை சேர்ந்த மாயாண்டி ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

இதேபோல் வடசென்னை அனல் மின் நிலையத்தில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு கம்பிகளை திருடியதாக மீஞ்சூரை அடுத்த புதுப்பேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக், அன்பு குமார் ஆகிய 2 பேரை காட்டூர் போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com