என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நாளை பெரம்பூர், போரூர், ஆழ்வார்திருநகரில் மின் தடை
- மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக போரூர், ஆழ்வார்திருநகர், பெரம்பூர் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
- மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
சென்னை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக இணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக போரூர், ஆழ்வார்திருநகர், பெரம்பூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
போரூர் பகுதியில் மாங்காடு நெல்லித்தோப்பு மகாலட்சுமி நகர், திருப்பதி நகர், மாசிலாமணி நகர், சார்ல்ஸ் நகர், கொழு மணிவாக்கம் பகுதி, ராஜீவ் நகர், குன்றத்தூர் மெயின் ரோடு, கே.கே நகர், அலெக்ஸ் நகர், முத்துகுமரன் கல்லூரி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
ஆழ்வார்திருநகர் பகுதியில் திருவள்ளுவர் சாலை மெயின் ரோடு, வீரப்பன் நகர், கிருஷ்ணன் கோவில் தெரு, ஜானகி நகர், அண்ணா தெரு, ராஜாஜி அவென்யூ.
பெரம்பூர் பகுதியில் பெரியார் நகர் முழுவதும், ஜி.கே.எம் காலனி முழுவதும், எஸ்.ஆர்.பி காலனி, பேப்பர் மில்ஸ் சாலை, பூம்புகார் நகர் முழுவதும், ராஜாஜி நகர், பார்த்திபன் தெரு, காமராஜ் தெரு, ஜானகி ராம் காலனி ஐ.சி.எப் முத்தமிழ் நகர் 4 மற்றும் 5-வது பிளாக் பகுதி, சென்னை பாட்டையா ரோடு, தெற்கு மாட வீதி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






