ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்த முதல் பிரதமர்

சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் ‘கேலோ இந்தியா' போட்டியை தொடங்கி வைத்தார். திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.
ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்த முதல் பிரதமர்
Published on

3 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் 'கேலோ இந்தியா' போட்டியை தொடங்கி வைத்தார்.

இன்று திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.

1947 இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் ஜவகர்லால் நேரு தொடங்கி தற்போதைய நரேந்திர மோடி வரை 15 பேர் பிரதமராக பதவி வகித்துள்ளனர். ஆனால் இதுவரை யாரும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்ததில்லை.

இந்நிலையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வந்த முதல் பிரதமர் என்ற பெருமையை பெற்ற மோடி, வரலாற்று பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com