தமிழில் பாடப்பட்ட கம்ப ராமாயண பாராயணத்தை ரசித்து கேட்ட பிரதமர் மோடி

ஸ்ரீரங்கம் கோவிலில் பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.கோவிலில் உள்ள ஆண்டாள் யானை பிரதமர் மோடிக்கு ஆசிர்வாதம் வழங்கியது.
தமிழில் பாடப்பட்ட கம்ப ராமாயண பாராயணத்தை ரசித்து கேட்ட பிரதமர் மோடி
Published on

திருச்சி:

3 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் 'கேலோ இந்தியா' போட்டியை தொடங்கி வைத்தார்.

இன்று திருச்சி சென்ற பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. 

ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ஆண்டாள் யானை பிரதமர் மோடிக்கு ஆசிர்வாதம் வழங்கியது.

இதையடுத்து கம்ப ராமாயண அரங்கேற்ற மண்டபத்தில் கம்ப ராமாயண பாராயணத்தை பிரதமர் மோடி கேட்டார். தமிழில் பாடப்பட்ட கம்ப ராமாயணத்தை மனமுருகி கேட்டு, பிரதமர் மோடி ரசித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com