search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நீர்திறப்பு 6 ஆயிரம் கனஅடியாக குறைப்பு
    X

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நீர்திறப்பு 6 ஆயிரம் கனஅடியாக குறைப்பு

    • மேட்டூர் அணையை பொறுத்தவரை நேற்று விநாடிக்கு 885 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 896 கன அடியாக அதிகரித்தது.
    • ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 2 ஆயிரம் கன அடியாக தொடர்ந்து நீடிக்கிறது.

    மேட்டூர்:

    கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும், காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 2 ஆயிரம் கன அடியாக தொடர்ந்து நீடிக்கிறது.

    மேட்டூர் அணையை பொறுத்தவரை நேற்று விநாடிக்கு 885 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 896 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், காவிரி டெல்டா பாசன பகுதிகளில் நீர் தேவை குறைந்துள்ளதால், நேற்று பிற்பகல் முதல் தண்ணீர் திறப்பு விநாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது.

    அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட வரத்து குறைவாக இருப்பதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்துவருகிறது. நேற்று 104.60 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 104.21அடியாக சரிந்தது.

    Next Story
    ×