வருமான வரி சோதனை நடந்த போதிலும் வழக்கம்போல் செயல்பட்ட கல்லூரிகள்

அருணை மருத்துவக் கல்லூரி, அருணை பொறியியல் கல்லூரி, கம்பன் கலைக்கல்லூரியில் சோதனை நடந்தது.சோதனை நடந்தபோதிலும் அமைச்சர் எ.வ.வேலுவின் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்பட்டன.
வருமான வரி சோதனை நடந்த போதிலும் வழக்கம்போல் செயல்பட்ட கல்லூரிகள்
Published on

வேங்கிக்கால்:

திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

அருணை மருத்துவக் கல்லூரி, அருணை பொறியியல் கல்லூரி, கம்பன் கலைக்கல்லூரியில் சோதனை நடந்தது.

உள்ளூர் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சோதனை நடந்தபோதிலும் அமைச்சர் எ.வ.வேலுவின் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்பட்டன.

கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மட்டும் அடையாள அட்டையை சரிபார்த்த பின்பு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

X

Maalai Malar
www.maalaimalar.com