ஏர்வாடியில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது

சுகாதாரத்துறையினர் மற்றும் ஏர்வாடி போலீசார் கிருஷ்ணன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். விசாரணைக்கு பின் கிருஷ்ணன் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
ஏர்வாடியில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது
Published on

களக்காடு:

நெல்லை மாவட்டம் ஏர்வாடி வடக்கு சேனையர் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது63). இவர் 8-ம் வகுப்பு வரை படித்துள்ளார். அதன்பின் பணகுடியில் உள்ள ஒரு மருந்து கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

அதனைதொடர்ந்து கிருஷ்ணன் வீட்டில் இருந்தபடி பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதுகுறித்து சுகாதாரத்துறைக்கு புகார்கள் வந்தது. அதன்பேரில் திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அதிகாரி பிரியதர்ஷினி ஏர்வாடி போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து சுகாதாரத்துறையினர் மற்றும் ஏர்வாடி போலீசார் கிருஷ்ணன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஏராளமான மாத்திரைகள், ஊசி மருந்துகள் இருப்பதும், அவர் அனுமதி இன்றி சட்ட விரோதமாக பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ சிசிச்சை அளித்ததும் தெரியவந்தது.

இதனைதொடர்ந்து கிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து மருந்து, மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்கு பின் அவர் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com