ஈரோடு மாநகர் முழுவதும் கார்கள் அணிவகுப்பால் கடும் போக்குவரத்து நெரிசல்

ஈரோடு கிழக்கு தொகுதி பரப்பளவில் சிறிய தொகுதியாகும். அரசியல் கட்சியினரின் கார்கள் சாலைகளில் அணிவகுத்து வருகின்றன.
ஈரோடு மாநகர் முழுவதும் கார்கள் அணிவகுப்பால் கடும் போக்குவரத்து நெரிசல்
Published on

ஈரோடு:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து அரசியல் கட்சியினர் ஈரோட்டுக்கு வந்து உள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி பரப்பளவில் சிறிய தொகுதியாகும். இந்த தொகுதி மாநகராட்சி பகுதியில் மட்டுமே வருவதால் ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொகுதிக்கு வந்து கொண்டே இருக்கின்றனர்.

இதனால் அரசியல் கட்சியினரின் கார்கள் சாலைகளில் அணிவகுத்து வருகின்றன. மாநகராட்சி பகுதியில் உள்ள பல்வேறு குறுகிய சாலைகள் மற்றும் வளைவுகளில் கார்கள் அதிகளவில் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் திணறி வருகிறார்கள்.

தினமும் காலை, மாலை நேரங்களில் ஜி.எச். ரவுண்டானா, பஸ்நிலையம், கடைவீதி, பன்னீர்செல்வம் பார்க், காளைமாட்டு சிலை, ரெயில் நிலையம், கொல்லம் பாளைம் ரெயில்வே நுழைவு பாலம், கருங்கல் பாளையம், மூலப்பட்டறை, வீரப்பன் சத்திரம், பெருந்துறை ரோடு, பி.பி.அக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com