search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விலை கடும் சரிவால் கால்நடைகளுக்கு உணவாகும் முருங்கை காய்கள்- விவசாயிகள் வேதனை
    X

    கால்நடைகளுக்கு உணவாக போடப்பட்ட முருங்கைக்காய்கள்.

    விலை கடும் சரிவால் கால்நடைகளுக்கு உணவாகும் முருங்கை காய்கள்- விவசாயிகள் வேதனை

    • ஒரு கிலோ செடி முருங்கை ரூ.12-க்கும், மர முருங்கை ரூ.8-க்கும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.
    • அரசு முருங்கை பவுடர் தொழிற்சாலை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், இடையகோட்டை, மார்க்கம்பட்டி, மாம்பாறை, கோவிந்தாபுரம், அய்யம்பாளையம், கள்ளிமந்தயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முருங்கைக்காய் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த முருங்கைக்காய்கள் ஒட்டன்சத்திரம் மற்றும் மார்க்கம்பட்டி பகுதியில் உள்ள சந்தைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது முருங்கை வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.100-க்கு விற்ற முருங்கை தற்போது விலை கடுமையாக சரிந்துள்ளது.

    ஒரு கிலோ செடி முருங்கை ரூ.12-க்கும், மர முருங்கை ரூ.8-க்கும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. பல்வேறு இன்னல்களுக்கிடையே விவசாயம் செய்து காய்கறிகளை சந்தைக்கு கொண்டு வந்தால் செலவு செய்த பணத்திற்கு கூட விலை கிடைக்காததால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர். இதனால் பெரும்பாலான விவசாயிகள் முருங்கை காய்களை கால்நடைகளுக்கு தீவனமாக போட்டு வருகின்றனர்.

    நிலத்தை உழுது பயிரிட்டு முறையாக தண்ணீர் பாய்ச்சி, உரம் வைத்து பராமரித்து வருடம் முழுவதும் வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காதது வேதனையை ஏற்படுத்தி உள்ளது. எனவே இதற்கு அரசு தீர்வு காணவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சீசன் காலங்களில் அதிகளவில் முருங்கை விளைகிறது. இதனை பவுடராக்கி வருடம் முழுவதும் பயன்படுத்தலாம். இதற்கு அரசு முருங்கை பவுடர் தொழிற்சாலை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

    Next Story
    ×