search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    புதிய கட்சி தொடங்க முன்னோட்டம் பார்க்கும் ஓபிஎஸ்- முன்னாள் அமைச்சர் பேட்டி
    X

    புதிய கட்சி தொடங்க முன்னோட்டம் பார்க்கும் ஓபிஎஸ்- முன்னாள் அமைச்சர் பேட்டி

    • ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வுக்கு திரும்பி வர வாய்ப்பு இல்லை.
    • அரசியல் ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் எடப்பாடி பழனிசாமிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றார்.

    சென்னை:

    மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை வருகிற 21-ந்தேதி நடத்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முடிவு செய்துள்ளார். இதற்கான அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.

    இதுகுறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்னையனிடம் கருத்து கேட்கப்பட்டது. அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வம் தற்போது உறுப்பினராக கிடையாது. அவருக்கும், அ.தி.மு.க.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கட்சி முழுமையாக எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் உள்ளது.

    இந்த நிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் கூட்டி இருப்பது புதிய கட்சி தொடங்குவதற்கான முன்னோட்டமாக இருக்கலாம். அதற்கான நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக இந்த கூட்டத்தை கூட்டலாம்.

    ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வுக்கு திரும்பி வர வாய்ப்பு இல்லை. அதே நேரத்தில் அவருக்கு வேறு வழியும் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறும் போது, "அ.தி.மு.க.வில் 1 லட்சம் கிளைகள் உள்ளன. அதன் மூலம் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் அவர் கட்டுப்பாட்டில் உள்ளனர். பொதுக்குழுவிலும் அதற்கான அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அரசியல் ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் எடப்பாடி பழனிசாமிக்கு எந்த பாதிப்பும் இல்லை" என்றார்.

    Next Story
    ×