மசூதி-நட்சத்திர ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸ் விசாரணை

சென்னையில் 2 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு மோப்ப நாய் மற்றும் நிபுணர்களுடன் ஓட்டலில் சோதனை நடத்தப்பட்டது.
மசூதி-நட்சத்திர ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸ் விசாரணை
Published on

சென்னை:

சென்னையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் நடப்பது வழக்கம். ஆனால் இப்போது நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மசூதிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

சென்னையில் 2 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தி.நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு இ-மெயில் மூலம் மிரட்டல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து ஓட்டல் நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

வெடிகுண்டு மோப்ப நாய் மற்றும் நிபுணர்களுடன் ஓட்டலில் சோதனை நடத்தப்பட்டது.

இதேபோல் ஆயிரம் விளக்கில் உள்ள 'சியா' மசூதிக்கு இன்று 4-வது முறையாக மிரட்டல் வந்தது. இதைத் தொடர்ந்து மசூதி நிர்வாகிகள் போலீசாருக்கு கொடுத்த தகவலை அடுத்து அங்கு வெடிகுண்டு சோதனை நடந்தது. சோதனை முடிவில் அவை புரளி என தெரிய வந்தது. ஆனாலும் மின்னஞ்சல் வந்த முகவரியின் அடிப்படையில் விசாரணை நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com