விக்கிரவாண்டி குண்டலப்புலியூர் ஆசிரம மேலாளர் உள்பட 3 பேருக்கு மேலும் 14 நாட்கள் காவல் நீட்டிப்பு

கைதான ஆசிரம மேலாளர் பிஜூமோன், பணியாளர்கள் அய்யப்பன், கோபிநாத் ஆகிய 3 பேரின் காவல் முடிவடைந்தது. ஆசிரம மேலாளர் பிஜூ மோன் உள்ளிட்ட 3 பேருக்கும் மேலும் 14 நாடகள் காவலை நீட்டித்து நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார்.
விக்கிரவாண்டி குண்டலப்புலியூர் ஆசிரம மேலாளர் உள்பட 3 பேருக்கு மேலும் 14 நாட்கள் காவல் நீட்டிப்பு
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி ஆசிரமம் இயங்கி வந்தது.

இந்த ஆசிரமத்தில் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர் அடித்து துன்புறுத்தப்பட்டது, அங்கிருந்த பெண்கள் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளியானது.

இந்த புகார்களின் அடிப்படையில் ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், ஆசிரம மேலாளர் பிஜூமோன், பணியாளர்கள் சதீஷ், அய்யப்பன், கோபிநாத் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், பிஜூமோன், சதிஷ், அய்யப்பன், கோபிநாத் ஆகிய 6 பேரை காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் 6 பேரையும் மீண்டும் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் கைதான ஆசிரம மேலாளர் பிஜூமோன், பணியாளர்கள் அய்யப்பன், கோபிநாத் ஆகிய 3 பேரின் காவல் முடிவடைந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் விழுப்புரம் வேடம்பட்டு சிறையில் இருந்தவாறு வீடியோ கான்பரன்சிங் மூலம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதனை தொடர்ந்து ஆசிரம மேலாளர் பிஜூ மோன் உள்ளிட்ட 3 பேருக்கும் மேலும் 14 நாடகள் காவலை நீட்டித்து நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார். வருகிற 14-ந் தேதி வரை அவர்களுக்கு காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com