பொதுமக்கள் லாரிகள் மூலம் குடிநீர் பெற தொடர்பு எண்கள் அறிவிப்பு

பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடா்பு கொள்ளலாம். குடிநீா் வாரியத்தின் குடிநீா்த் தொட்டிகள் மற்றும் பொது பயன்பாட்டுக்கு இலவசமாக குடிநீா் வழங்கப்படும்.
பொதுமக்கள் லாரிகள் மூலம் குடிநீர் பெற தொடர்பு எண்கள் அறிவிப்பு
Published on

சென்னை:

பொதுமக்கள் லாரிகள் மூலம் குடிநீா் விநியோகத்தைப் பெற கட்டணமில்லா தொலைபேசி எண்களை சென்னை பெருநகர குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் அறிவித்துள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,

"சென்னை பெருநகர குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வாயிலாக லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம் பெற பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1916 மற்றும் 044-45674567 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம். தெருநடைகள், குடிநீா் வாரியத்தின் குடிநீா்த் தொட்டிகள் மற்றும் பொது பயன்பாட்டுக்கு இலவச மாக குடிநீா் வழங்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com