மேற்கு வங்காள பாஜக தலைவர் சென்ற கார் மீது திடீர் தாக்குதல்

மேற்கு வங்காள மாநில பா.ஜ.க. தலைவர் சென்ற கார்மீது தாக்குதல் நடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக தலைவர் சென்ற கார்
பாஜக தலைவர் சென்ற கார்
Published on

கொல்கத்தா:

மேற்கு  வங்காள மாநில பா.ஜ.க. தலைவராக இருந்து வருபவர் திலீப் கோஷ். 

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசுக்கும், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. 

இந்நிலையில், பா.ஜ.க. தலைவர் திலீப் கோஷ் தனது காரில் பாதுகாவலர்களுடன் வடக்கு 24 பர்கானாஸ் பகுதிக்கு இன்று சென்றுகொண்டிருந்தார். அங்குள்ள கடையில் டீ குடிக்கச் சென்றார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், அவரது கார் மீது தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இதுதொடர்பாக திலீப் கோஷ் கூறுகையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் சிலர் திடீரென வந்து எனது கார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். திரிணாமுல் காங்கிரசாருக்கு என்ன பிரச்சினை என எனக்கு தெரியவில்லை? என தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்காள பா.ஜ.க. தலைவர் சென்ற கார்மீது தாக்குதல் நடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com