என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டி20 உலக கோப்பையில் விளையாட மறுப்பு: வங்கதேச நிலைப்பாடுக்கு பாகிஸ்தான் ஆதரவு
- வங்கதேசத்தின் நிலைப்பாடுக்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்துள்ளது.
- இது தொடர்பாக ஐ.சி.சி.க்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கராச்சி:
இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையில் பங்கேற்பது குறித்து இன்றுக்குள் முடிவு எடுக்க வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) கெடு விதித்து இருந்தது.
இந்தியாவில் விளையாட மறுக்கும் பட்சத்தில் தரவரிசை அடிப்படையில் வங்கதேசத்துக்கு பதிலாக மாற்று அணியாக ஸ்காட்லாந்து இடம்பெறும் என்றும் எச்சரித்தது.
இதைத் தொடர்ந்து ஐ.சி.சி.யின் அழுத்தத்துக்கு அடிபணிய மாட்டோம் என்று வங்கதேச அரசின் விளையாட்டுத் துறை ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் தெரிவித்தார்.
இந்த நிலையில் பாதுகாப்பு கருதி இந்தியாவில் விளையாட மறுக்கும் வங்கதேசத்தின் நிலைப்பாடுக்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ.சி.சி.க்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Next Story






