தன் பெயரை சொல்லி அரசியல் செய்யுமாறு ராமர் கூறவில்லை - சிவசேனா சாடல்

ராம ராஜ்ஜியம் எனக்கூறி பாஜக அரசியல் செய்து வருவதாகவும், தன் பெயரைச் சொல்லி அரசியல் செய்யுமாறு ராமர் கூறவில்லை எனவும் பாஜகவை சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது. #ShivSena #BJP
தன் பெயரை சொல்லி அரசியல் செய்யுமாறு ராமர் கூறவில்லை - சிவசேனா சாடல்
Published on

மும்பை:

சமீபத்தில் பாஜகவைச் சேர்ந்த சுரேந்திர சிங், நாட்டில் நடக்கும் கற்பழிப்பு சம்பவங்களை ராமராலும் கூட தடுக்க முடியாது எனக்கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். இது பல்வேறு தரப்பிலும் கடும் விமர்சனத்துக்கும் கண்டனத்துக்கும் உள்ளாக்கப்பட்டது.

இந்நிலையில், இதுதொடர்பாக சிவ சேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் தலையங்கம் வெளியிடப்பட்டது. அதில், கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நாட்டில் பாஜக எவ்வாறு ராம ராஜ்ஜியம் அமைக்கும்? என கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க நடவடிக்கைகளை எடுக்காமல், ராமராலும் கூட இதனை தடுக்க முடியாது என பாஜக கூறி வருவதாக விமர்சித்துள்ளது. இதையடுத்து, பாஜக எதிர்க்கட்சியாக இருந்த போது ஒரு நிலைப்பாடும், இப்போது மற்றொரு நிலைப்பாட்டுடன் இருப்பதாகவும் சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது.

நாட்டில் ஆட்சி மாற்றம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும், பெண்கள் மீதான கற்பழிப்பு மற்றும் வன்கொடுமை சம்பவங்கள் மாறவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாஜக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கைமீறிப்போனதாகவும் சிவசேனா தெரிவித்துள்ளது.

இதுபோன்ற நிலையில் ராம ராஜ்ஜியம் எவ்வாறு அமைக்கப்படும்? அதற்கான திட்டங்கள் குறித்து பாஜக விளக்க வேண்டும் எனவும் சிவசேனா குறிப்பிட்டுள்ளது.

ராம ராஜ்ஜியம் அமைக்கப்படும் எனக்கூறி பாஜக அரசியல் செய்வதாகவும், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தன் பெயரை பயன்படுத்திக் கொள்ளுமாறு ராமர் கூறவில்லை எனவும் சாம்னா தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. #ShivSena #BJP

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com